ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 180 பேரை தங்கள் பகுதிக்குள் நுழைந்து மீன் பிடித்ததாகக் கூறி ஆந்திர மீனவர்கள் சிறை பிடித்திருப்பது கண்டனத்திற்குரியது. இரு மாநில அரசுகள் உடனடியாக தலையிட வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்ட அறிக்கை:
“ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 180 பேரை தங்கள் பகுதிக்குள் நுழைந்து மீன் பிடித்ததாகக் கூறி ஆந்திர மீனவர்கள் சிறை பிடித்திருப்பது குறித்து டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிற நாட்டு கடல் எல்லைக்குள் நுழையாமல் ஆழ்கடலில் எவர் வேண்டுமானாலும் மீன் பிடிக்கலாம் என்ற பொதுவான விதி நடைமுறையில் இருந்து வரும் நிலையில், ஆந்திர மீனவர்கள் இப்படி நடந்து கொள்வது ஏற்புடையதல்ல.
ஏற்கெனவே இதேபோன்று ஆந்திர மீனவர்கள் அத்துமீறி நடந்து கொண்டதில் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களைக் கவனத்தில் கொண்டு, தமிழக மற்றும் ஆந்திர மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும்.
மேலும் இது போன்ற பிரச்னைகள் இனிவரும் காலங்களில் நிகழக்கூடாது என்பதை தமிழக அரசு உறுதி செய்வதோடு, சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவித்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago