காப்பீட்டு குறை தீர்ப்பாளரின் இழப்பீட்டுத் தொகை வழங்கும் அதிகார வரம்பு உயர்த்தப்படுமா?

By ப.முரளிதரன்

காப்பீட்டு குறைதீர்ப்பாளருக்கு (இன்சூரன்ஸ் ஆம்புட்ஸ்மேன்) ரூ.20 லட்சம் வரை மட்டுமே இழப் பீட்டுத் தொகை வழங்குவதற்கான அதிகாரம் உள்ளதால் அதைவிட கூடுதல் இழப்பீடு கேட்டு வரும் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள் ளது.

இன்சூரன்ஸ் சேவை தொடர் பான புகார்களை அளிக்க 1998-ல் இன்சூரன்ஸ் ஆம்புட்ஸ் மேன் ஏற்படுத்தப்பட்டது. இங்கு காப் பீட்டு சேவைகள், காப்பீட்டு ஏஜென்டுகள், காப்பீட்டு நிறுவ னங்கள் தொடர்பான புகார்கள் விசாரிக்கப்பட்டு பாலிசிதாரர் களுக்கு இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தரப்படுகிறது.

இந்நிலையில், காப்பீட்டு குறை தீர்ப்பாளருக்கு ரூ.20 லட்சம் வரை மட்டுமே இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான அதிகாரம் உள்ளதால் அதை விட கூடுதல் இழப்பீடு கேட்டு வரும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, காப்பீட்டு குறை தீர்ப்பாளர் வீரேந்திர குமார் கூறிய தாவது: காப்பீட்டுத் குறை தீர்ப் பாளர் அலுவலகம் ஏற்படுத்தப் பட்டு 17 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், எங்களுக்கு குறிப்பிட்ட அளவு அதிகாரம் மட்டுமே வழங் கப்பட்டுள்ளன. குறிப்பாக, ரூ.20 லட்சம் வரை மட்டுமே இழப் பீட்டு தொகை வழங்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது.

நாடு இன்று அனைத்து துறை களிலும் முன்னேறி வருகிறது. பொது மக்கள் இன்று ரூ.20 லட்சத்துக்கும் மேல் மதிப்புள்ள கார்களை வாங்குகின்றனர். அந் தக் காரின் மதிப்புக்கு ஏற்ப காப்பீடு எடுக்கின்றனர். அதே போல், பொதுமக்களும் இன்று சர்வ சாதாரணமாக ரூ.20 லட்சத்துக் கும் மேல் மருத்துவக் காப்பீடு எடுக்கின்றனர். ஆனால், இதில் ஏதேனும் சேவைக் குறைபாடுகள் ஏற்பட்டால் அவர்களுக்கு நாங் கள் இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தர முடியாது.

எங்களுக்கு ரூ.20 லட்சம் வரை மட்டுமே இழப்பீட்டுத் தொகை வழங்க அதிகாரம் உள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு ரூ.50 லட்சம் வரை இழப்பீட்டுத் தொகை வழங்க எங்களுக்கு அதிகாரம் வழங்குவதென அரசு தீர் மானித்தது. ஆனால், இதுவரை அதிகாரம் வழங்கப்படவில்லை.

மேலும், 20 லட்சத்துக்கு மேல் இழப்பீடு கேட்டு வரும் புகார் மனுக்களை நுகர்வோர் நீதிமன்றம் தான் விசாரிக்க வேண் டும். ஆனால், நுகர்வோர் நீதிமன் றம் காப்பீடு தொடர்பான புகார் களை மனுக்களை விசாரிக்க போதிய தொழில்நுட்ப அறிவு இல்லாததால் அது குறித்து விசா ரிக்க முடியாமல் எங்களை அணு கும்படி நீதிமன்றங்கள் கூறுகின் றன. இவ்வாறு வீரேந்திர குமார் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்