புதுச்சேரியில் இன்று புதிதாக 24 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஜன 27) தெரிவித்திருப்பதாவது:
''புதுச்சேரி மாநிலத்தில் 1,979 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 21 பேருக்கும், மாஹேவில் 3 பேருக்கும் என மொத்தம் 24 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காரைக்கால், ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை.
மேலும், புதுச்சேரி சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 87 வயது முதியவர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதன் மூலம் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 646 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.66 ஆக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 38 ஆயிரத்து 934 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைகளில் 102 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 180 பேரும் என மொத்தம் 282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று 36 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 6 (97.62 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 5 லட்சத்து 65 ஆயிரத்து 731 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 5 லட்சத்து 22 ஆயிரத்து 262 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது''.
இவ்வாறு அருண் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago