தமிழகத்தில் திரையரங்குகளை திறக்கலாம். ஆனால், கிராம சபைக் கூட்டம் நடத்தக்கூடாது என்பதை ஏற்க முடியாது என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியது:
டெல்லியில் குடியரசு தினத்தில் பொதுவாக ராணுவ வீரர்கள்தான் அணிவகுப்பார்கள். நிகழாண்டு அவ்வாறு அணிவகுப்பு நடப்பது ஒருபுறம் இருந்தாலும், டிராக்டர்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக செல்கின்றனர்.
வாழ்வாதாரத்தை நசுக்கும் அளவுக்கு உள்ள மத்திய அரசின் 3 சட்டங்களை ரத்து செய்யக் கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராடுகின்றனர்.
மக்களை மதிக்கும் அரசு மத்தியில் அமைக்க வேண்டும் என்று நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்றார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: திரையரங்குகளை திறக்கலாம். ஆனால், கிராம சபைக் கூட்டம் நடத்தக்கூடாது என்பதை ஏற்க முடியாது. எதிர்க்கட்சியினர் மக்களை சந்திக்கக்கூடாது என்பதற்காக மத்திய அரசின் கட்டளையை தமிழக அரசு செயல்படுத்துகிறது என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago