குடியரசு தின விழா: ராமநாதபுரத்தில் 57 போலீஸாருக்கு முதல்வர் பதக்கம்

By கே.தனபாலன்

ராமநாதபுரத்தில் நடந்த குடியரசு தின விழாவில் 57 போலீஸாருக்கு முதல்வர் பதக்கங்களை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்ற 72-வது குடியரசு தின விழாவில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். உடன் காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் இருந்தார்.

விழாவில் மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 57 போலீஸாருக்கு முதல்வர் பதக்கங்களையும், 20 போலீஸாருக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும், பல்வேறு துறைகளைச் சோந்த 123 அரசுத்துறை அலுவலர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 57 பயனாளிகளுக்கு ரூ.29,58,122 மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார்.

இவ்விழாவில் ராமநாதபுரம் சரக டிஐஜி என்.எம்.மயில்வாகனன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) எம்.பிரதீப்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஏ.சிவகாமி, ராமநாதபுரம் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உ.திசைவீரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சேக் முகம்மது, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன் மற்றும் முக்கியப் பிரமுகர்கள், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்