‘‘மக்கள் துணையோடு தேர்தலில் பண, அதிகார பலத்துடன் நிற்கும் அதிமுக, பாஜகவை தோற்கடிக்க வேண்டும்,’’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
அவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதாவது: ”தேர்தலில் மக்களின் துணையோடு பண, அதிகார பலத்துடன் நிற்கும் அதிமுக, பாஜகவை தோற்கடிக்க வேண்டும். தமிழ் மொழி, கலாச்சாரத்திற்கு மத்திய அரசு ஊறுவிளைவிக்கிறது.
நாட்டில் உள்ள முஸ்லிம், கிறிஸ்தவர்களை இரண்டாம்தார குடிமக்களாக பாவிக்கிறது. ஒரே நாடு ஒரேத் தலைவர் என்ற கொள்கையில் நாடு போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தன்னை விவசாயி என்று கூறிக்கொள்ளும் பழனிசாமி சமீபத்தில் டில்லி சென்றபோது அங்கு போராடும் விவசாயிகளை சந்தித்து ஆறுதல் வார்த்தை கூறியிருக்கலாம்” என்று கூறினார்.
கார்த்திசிதம்பரம் எம்பி, திருப்பத்தூர் தொகுதி பொறுப்பாளர் பழனியப்பன், நகர்த் தலைவர் திருஞானசம்மந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
5 mins ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago