காதல் மனைவியை கண்டுபிடிக்கக்கோரி சிங்கப்பூர் கிரிக்கெட் வீரர் உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு

By கி.மகாராஜன்

காதல் மனைவியைக் கண்டுபிடித்து ஒப்படைக்கக்கோரி சிங்கப்பூர் கிரிக்கெட் வீரர் உயர் நீதிமன்றக் கிளையில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

தஞ்சை பேராவூரணி அருகே பெருமகளூரைச் சேர்ந்தவர் சுரேந்திரன். கிரிக்கெட் வீரர். இவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

சிங்கப்பூர் நாட்டிற்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறேன். நானும் தஞ்சாவூரைச் சேர்ந்த சிநேகா என்பவரும் காதலித்து வந்தோம். எங்கள் காதலுக்கு சிநேகா குடும்பத்தினர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டனர். இந்நிலையில் சிநேகாவுக்கு அவரது பெற்றோர் வேறு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். இதை சிநேகா என்னிடம் தெரிவித்தார்.

இதனால் நாங்கள் இருவரும் கடந்தாண்டு டிச.13ல் திருவோணம் செல்வமுருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம்.

எங்கள் திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தோம். தற்போது சிநேகாவை அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று மறைத்து வைத்துள்ளனர்.

சிநேகாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றனர். அதற்கு மறுத்தால் சிநேகாவை ஆணவக் கொலை செய்யும் அபாயம் உள்ளது.

தற்போது சிநேகா எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தும் சிநேகாவைக் கண்டுபிடிக்கவில்லை. எனவே என் மனைவி சிநேகாவைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்