ரத்த தான விழிப்புணர்வு குறும்படப் போட்டி: கேரளம் முதலிடம்; தமிழகம் மூன்றாமிடம்

By குள.சண்முகசுந்தரம்

தன்னார்வ ரத்த தானத்தை ஊக்கு விப்பதற்காக ‘friends2support.org’ என்ற அமைப்பு நடத்திய உலக அளவிலான குறும்படப் போட்டியில் கேரள இயக்குநரின் ‘காட்ஸ் இங்க்’ என்ற படம் முதல் பரிசைப் பெற்றுள்ளது.

இணைய வழியாக இலவச ரத்த தான சேவையை வழங்கி வரும் ‘friends2support.org’ அமைப்பு ரத்த தானத்தை ஊக்குவிப்பதற் காகவும் அதுகுறித்து மக்க ளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்காகவும் வேல்டெக் பல் கலைக்கழகத்துடன் இணைந்து குறும்படப் போட்டியை 3 மாதங் களுக்கு முன்பு அறிவித் திருந்தது. இந்நிலையில், முதல் 3 இடங்களைப் பிடித்த படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய ’friends2support.org’ என்ற அமைப்பின் தமிழக ஒருங் கிணைப்பாளர் சதீஷ் குமார்

‘‘போட்டியில் இந்தியா, இலங்கை, மலேசியா, பிலிப் பைன்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து 20 மொழிகளில் எடுக்கப்பட்ட 850 குறும்படங்கள் வரப்பெற்றன. இதிலிருந்து முதல் கட்டமாக 100 படங்களை எங்களது தொழில் நுட்பக் குழுவினர் தேர்வு செய் தனர். அவற்றிலிருந்து 15 படங் களை தேர்வு செய்யும் பொறுப்பை நடுவர்களிடம் ஒப்படைத்தோம்.

பத்மபூஷன் விருது பெற்ற விஞ்ஞானி வரபிரசாத் ரெட்டி, இயக்குநர் விஜய், நடிகர் பிரபு தேவா, தெலுங்கு இயக்குநர் நானி, புகைப்படக் கலைஞர் அரவிந்த் செஞ்சி, அனிமேஷன் ஃபிலிம் டிசைனர் வைபவ் குமார், மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தின் உதவி இயக்குநர் டாக்டர் ஷோபினி ராஜன் ஆகியோர் இந்தப் போட்டிக்கான நடுவர்களாக இருந்தனர்.

நடுவர்களால் தேர்வு செய்யப் பட்ட படங்கள் அக்டோபர் முதல் தேதி உலக ரத்ததான தினத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில் அறிவிக்கப்பட்டன. கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த ராகேஷ் விஜய் இயக்கிய ‘காட்ஸ் இங்க் (God's Ink) என்ற படம் முதல் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டது. 2-ம் இடம் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணி லாவைச் சேர்ந்த பெர்னடின் என்ற பெண் இயக்கிய ’ரெட் பலூன்” (Red Balloon) தட்டிச் சென்றது.

3-ம் இடத்தை 2 படங்கள் பிடித்தன. தாம்பரத்தைச் சேர்ந்த மணிகண்டன் இயக்கிய, ’ஹூ இஸ் காட் (Who Is God)' என்ற குறும்படத்துக்கும் மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சஞ்சீவ் மஹாபாத்ரா ஃபிலிம் அகாடமி இயக்கிய ‘தி பெயின்டர் (The Painter) என்ற குறும்படத்துக்கும் 3-ம் பரிசு கிடைத்தது. இதைத்தவிர, மேலும் 5 படங்களை சிறப்புத் தகுதி கொண்ட படங்களாக நடுவர் குழு தேர்வு செய்தது.

இறுதிப் போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அத்தனை படங்களையும் மாநில மொழி களில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சார படமாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுப்பதாக மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகத்தின் உதவி இயக்குநர் டாக்டர் ஷோபினி ராஜன் உத்தரவாதம் அளித் துள்ளார்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்