திருச்சி மாநகரில் சாலைகளில் மாடு களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், அவற்றை போலீஸாரே விரட்டி வருகின்றனர். விபத்து ஏற்படாமல் தடுக்கும் போலீஸாரின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாநகரில் பெரும்பாலான பகுதிகளிலுள்ள சாலைகளில் மாடுக ளின் நடமாட்டம் அதிகளவில் காணப் படுகிறது. இவற்றால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக் கொள் கின்றனர். பல இடங்களில் போக் குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
எனவே, சாலைகளில் மாடுகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திடம் காவல்துறை யினரும், பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தியும் பலனில்லை. எனவே, காவல்துறை சார்பில் இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன்படி, ஒவ்வொரு பகுதியிலும் மாடுகள் வளர்ப்போரை அழைத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, சாலைகளில் நடமாடக்கூடிய மாடுக ளால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய் யப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். அத்துடன், சாலைகளில் நடமாடும் மாடுகளின் உரிமையாளர்களையும் கைது செய்தனர். ஆனால் அதற்குப் பிறகும் சாலைகளில் மாடுகளின் நடமாட்டம் குறையவில்லை.
இதையடுத்து, போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸார், அந்தந்த பகுதிகளிலுள்ள சாலைகளில் நடமாடக் கூடிய மாடுகளை தாங்களே விரட்டி விடும் பணியில் ஈடுபடத் தொடங்கி விட்டனர். டிவிஎஸ் டோல்கேட் பகுதி யில் நேற்று மாலை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸ் நிஷா என்பவர், கையில் குச்சியுடன் சென்று அந்த வழியாக வரக்கூடிய மாடுகளை விரட்டும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார். இதைக்கண்ட சமூக ஆர்வலர்கள் அதை படம்பிடித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு காவல் துறையினரை பாராட்டி வரு கின்றனர்.
இதுகுறித்து மாநகர போக்கு வரத்து ஒழுங்கு பிரிவு காவல் அதி காரிகளிடம் கேட்டபோது, ‘‘சாலைக ளில் மாடுகளை திரியவிடும் உரிமை யாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கு மாறு மாநகராட்சியிடம் பலமுறை கூறி யும் பலனில்லை. நாங்கள் பிடித்துக் கொடுத்தாலும், அவற்றை விட்டு விடுகின்றனர்.
எனவே, வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குவதைத் தடுக்க, சாலையில் நடமாடும் மாடுகளை நாங்களே விரட்டிவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். அனைத்து காவலர் களும் கட்டாயமாக இதைச் செய்ய வேண்டுமென யாரிடமும் கூறவில்லை. விருப்பமுள்ள, சமூக பொறுப்புள்ள காவலர்கள் ஆங்காங்கே இதைச் செய்து வருகின்றனர்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago