திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூசத்தை முன்னிட்டு வரும் 28-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
இது தொடர்பாக திருக்கோயில் இணை ஆணையர் (பொ) சி.கல்யாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்க்கடவுள் முருகனின் முக்கிய விழாவில் ஒன்றான தைப்பூசத்திருவிழா வரும் 28-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இவ்விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. காலை 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது.
» தொடர் மழையால் மூழ்கிக் கிடக்கும் உப்பளங்கள்: தூத்துக்குடியில் தாமதமாகும் நடப்பாண்டு உப்பு உற்பத்தி
» புதுச்சேரியில் புதிதாக 22 பேருக்கு கரோனா: உயிரிழப்பு ஏதுமில்லை
அதனைத் தொடர்ந்து காலை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 8.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு சுவாமி அலைவாயுகந்த பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சி திருக்கோயில் உள்பிரகாரத்தில் வைத்து நடைபெறும் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago