பெரியார் பன்னாட்டு அமைப்பு, விடு தலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனுக்கு சமூக நீதிக் கான கி. வீரமணி விருது வழங்கி யது.
இவ்விருது பெற்ற திருமாவள வனுக்கு விழுப்புரத்தில் நேற்று முன்தினம் இரவு பாராட்டு விழா நடந்தது. திருவள்ளுவர் கல்வி இயக்கத்தின் தலைவர் பாலு தலைமை தாங்கினார்.
இவ்விழாவில் விசிக மாவட்டசெயலாளர் ஆற்றலரசு, பேராசிரியர்பிரபா கல்விமணி, ரவிக்குமார் எம்பிஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பங்கேற்ற திரு மாவளவன் பேசியது:
எனக்கு இந்த விருதை வழங்கி யதைவிட விடுதலை சிறுத்தைகள் கட்சியை அங்கீகரித்தது பெருமை யாக உள்ளது. இது 30 ஆண்டுகள் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.
திருமாவளவனை யாரும் தனிமைபடுத்தவோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியை ஓரங்கட் டவோ முடியாது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கூட்டணியில் சலசலப்பை உண்டாக்க என்னை குறிவைத்து அப்பட்டமான அவ தூறுகளை அள்ளி வீசுகிறார்கள்.
அடுத்து நாங்கள்தான் முதல்வர் என தம்பட்டம் அடிக்கும் கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை. மேலும், எந்த சாதிக்கும் எதிரான கட்சியும் அல்ல.
சமூக நீதியை அழிக்க, பெரி யாரின் அடையாளத்தை சிதைக்க முயற்சிக்கிறார்கள். பாஜகவுடன் கூட்டணி வைத்து இருப்பவர்கள் சமூக நீதிக்கு எதிரானவர்கள். அவர்கள் தங்கள் சாதிக்கும், நம்பும் சாதிக்கும் எதிராக உள்ளனர்.
பாஜக முதலில் காவு வாங் கப்போவது அதிமுகவைத்தான். திமுக - பாஜக என்ற நிலையை உருவாக்க முயல்கின்றனர். தமிழ் சமூகத்திற்கு அதிமுக மிகப்பெரிய துரோகம் செய்து வருகிறது என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
39 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago