டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு கண்டிப்பாக ரசீது கொடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜேஸ்வரி பிரியா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு ரசீது வழங்குவதில்லை. ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.10 வரை அதிகமாக வசூலிக்கின்றனர். பல டாஸ்மாக் கடைகளில் போலி மதுபானங்களும் விற்கப்படுகின்றன.
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு ரசீது வழங்க வேண்டும் என நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டும் ரசீது வழங்குவதில்லை. எனவே டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக கட்டணம் வாங்கவும், போலி மதுபான விற்பனைக்கு தடை விதித்தும், மதுபான விற்பனைக்கு கம்யூட்டர் ரசீது வழங்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு:
டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனைக்கு ரசீது கொடுக்க வேண்டும் என விதிகளில் உள்ளது. இருப்பினும் இந்த விதியை பின்பற்றி ரசீது வழங்குவதில்லை. மதுபானங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் விற்பனை செய்யப்படும் மது பானங்களுக்கு கண்டிப்பாக ரசீது வழங்க வேண்டும். ஒவ்வொரு கடைகளின் முன்பு மதுபானங்களின் விலை பட்டியல் அனைவருக்கும் தெரியும் வகையில் வைக்க வேண்டும். மதுபான விற்பனை ரசீது ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.
இந்த உத்தரவு டாஸ்மாக் கடைகளில் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாத டாஸ்மாக் ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த உத்தரவு கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்களுக்கு டாஸ்மாக் மேலாண் இயக்குனர்கள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து டாஸ்மாக் மேலாண் இயக்குனர் பிப். 6-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago