முதல்வர் நாரயணசாமி உத்தரவிட்டு 24 மணி நேரம் கடந்தும் தடுப்புகள் அகற்றப்படவில்லை.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் அறிவித்ததன் எதிரொலியாக கடந்த 7ம் தேதி முதல் ஆளுநர் மாளிகை, தலைமை செயலகம், சட்டப்பேரவை வளாகத்தை சுற்றிலும் தடுப்புகட்டைகள் அமைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. பாரதி பூங்கா காலவரையின்றி பூட்டப்பட்டுள்ளது.
அத்துடன் துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 144 தடை <உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஆளுநர் மாளிகையை சுற்றிலும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
ஆனால், 144 தடை உத்தரவு, துணை ராணுவம் வருகை, தடுப்புகட்டைகள் அமைத்தது பற்றி சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் எந்தவிதமான அனுமதியும் பெறவில்லை என முதல்வர் நாராயணசாமி அதிருப்தி தெரிவித்திருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்பு கட்டைகளை அகற்ற வேண்டும் என கெடு விதித்தார். பின்னர் சட்டப்பேரவை நடந்த 18ம் தேதி மாலை தடுப்புகட்டைகள் முற்றிலுமாக அகற்றப்படும் என அறிவித்தார்.
இதற்கு பிறகும் தடுப்புகட்டைகள் அகற்றப்படவில்லை. அத்துடன் 144 தடை உத்தரவு விலக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று காலை நடந்த பேரிடர் மேலாண்மை குழு கூட்டத்தில், தடுப்புகட்டைகளை அகற்ற வேண்டும் என பேரிடர் தடுப்பு மேலாண் குழுதலைவர் என்ற அடிப்படையில் 24 மணிநேர கெடு விதித்து உத்தரவிட்டார்.
ஆனால் 24 மணி நேரம் கடந்தும் இன்று தடுப்புக்கட்டைகள் அகற்றப்படவில்லை. தற்போது முதல்வர் டெல்லி சென்றுள்ளார். அதே நேரத்தில் ஆளுநர் மாளிகை சுற்றுப்புறப்பகுதியில் செல்ல கெடுபிடி தொடர்ந்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago