குறுகிய கால அறிவிப்பினிடையே பள்ளிகள் திறந்ததால், மாணவர்கள் சீருடை அணிந்து பள்ளிக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 10 மாதங்களுக்குப் பிறகு 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு கரோனா வழிகாட்டுதல்கள் நெறிமுறைகளை பின்பற்றி நேற்று பள்ளிகளை திறக்க அரசு அனுமதித்தது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.
இந்த நிலையில் குதிரைசந்தல் மற்றும் தொட்டியம் அரசு மேல் நிலைப்பள்ளிகளில் மாவட்ட ஆட் சியர் கிரண்குராலா நேரில் ஆய்வு செய்தார். முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) ஏ.கே.கோபி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
நேற்று பள்ளி திறந்த நிலையில் பெரும்பாலான மாணவர்கள் வந்திருந்தனர். இந்நிலையில், வராத மாணவர்கள் குறித்து பள்ளி தரப்பில் கேட்டபோது, " பொங்கலுக்காக வெளியூர் சென்ற மாணவர்களில் சிலர் வரவில்லை. 10 மாதமாக வீட்டிலேயே இருந்ததால், உடல் பருமன் அதிகரித்து விட்டதால் சில மாணவர்களால் பழைய சீருடையை அணிய முடியவில்லை. புதிய சீருடை வாங்கி தைப்பதற்கு போதிய அவகாசம் இல்லாததாலும் பள் ளிக்கு வர இயலாமல் போனது. மாணவர்களை அவர்களது பெற் றோர்களே அழைத்தும் வந்தனர்" என்று தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago