தமிழகத்தில் இன்று 543 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 8,31,866. சென்னையில் மட்டும் மொத்தம் 2,29,386 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் ஒருவருக்கும் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 25,97,279.
சென்னையில் 152 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 391 பேருக்குத் தொற்று உள்ளது.
* தற்போது 68 அரசு ஆய்வகங்கள், 184 தனியார் ஆய்வகங்கள் என 252 ஆய்வகங்கள் உள்ளன.
» ஜன.19 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்
» ஜனவரி 19 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்
இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:
* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 5,487.
* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,53,31,269.
* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 51,461.
* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 8,31,866.
* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 543.
* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 152.
* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 5,02,811 பேர். பெண்கள் 3,29,021 பேர். மூன்றாம் பாலினத்தவர் 34 பேர்.
* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 334 பேர். பெண்கள் 209 பேர்.
* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 772 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8,14,098 பேர்.
* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 6 பேர் தனியார் மருத்துவமனையிலும், 3 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 12,281 ஆக உள்ளது. இதுவரை சென்னையில் மொத்தம் 4,072 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 9 பேர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் ஒருவருமில்லை.
இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago