தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி யின் சென்னை செட்டிநாட்டு அரண் மனையில் ரஜினியின் ‘கபாலி’ படப்பிடிப்பு நடத்த ஆட்சேபம் தெரிவித்து செட்டிநாடு குழுமத் தலைவர் எம்.ஏ.எம்.ஆர்.முத் தையா தரப்பில் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள செட்டிநாடு அரண்மனையின் ஒரு பகுதியில் எம்.ஏ.எம்.ராமசாமியும் இன்னொரு பகுதியில் எம்.ஏ.எம்.ஆர்.முத்தை யாவும் வசிக்கிறார்கள். இந்த நிலையில், முத்தையாவின் சுவீ காரத்தை ரத்து செய்துவிட்டதாக அறிவித்த எம்.ஏ.எம்.ராமசாமி, அரண்மனையை விட்டு முத்தையா வெளியேற வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து, இந்த விவகாரத்தில் ’தற்போதைய நிலையே தொடர வேண்டும்’ என்று சொல்லி விசாரணையை ஒத்தி வைத்தது நீதிமன்றம்.
இந்த நிலையில், ரஜினியின் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பை நடத்த எம்.ஏ.எம்.ராமசாமி அனுமதி அளித்ததால், நேற்று முன்தினம் காலையில் அரண்மனையில் ‘கபாலி’ படப்பிடிப்பு தொடங் கியது. ரஜினிகாந்த் அரண்மனை முகப்பில் காரில் வந்து இறங் கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.
இந்நிலையில், போலீஸாருடன் அரண்மனைக்கு வந்த முத்தையா தரப்பு 10 வழக்கறிஞர்கள் ‘‘நீதி மன்ற உத்தரவை மீறி படப்பிடிப்புக்கு அனுமதி அளித் தது நீதிமன்ற அவமதிப்பு என்பதால் நாங்கள் நோட்டீஸ் கொடுக்க வந்திருக்கிறோம்’’ என்றார்கள். இதை ஏற்க மறுத்த எம்.ஏ.எம்.ராமசாமி தரப்பினர், ‘‘நீதிமன்ற அவமதிப்பு என்றால் நீதிமன்றத்தில் முறையிடுங்கள். நீங்கள் தரும் நோட்டீஸை வாங்க முடியாது’’ என்று எதிர்வாதம் செய்தனர். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து முத்தையா தரப்பினர், படப்பிடிப்புக்கு அனு மதி அளிக்கப்பட்டதை எதிர்த்து போலீஸில் புகார் கொடுத்தனர். இது குறித்து நம்மிடம் பேசிய தொழிலதிபர் ஏ.சி.முத்தையா, ‘‘எம்.ஏ.எம். தனக்குச் சொந்தமான அரண்மனையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு யாரைக் கேட்க வேண்டும்? இதில் நாங்கள் எந்த இடத்திலும் நீதிமன்ற அவமதிப்பு செய்யவில்லை’’ என்று சொன்னார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
5 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago