குடியரசு தின விழா ஒத்திகை: சென்னையில் ஜன.20, 22, 24, 26 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் 

By செய்திப்பிரிவு

குடியரசு தின விழா கொண்டாட்டம் வருகிற ஜன.26-ம் தேதி காமராஜர் சாலையில் காந்தி சிலை அருகில் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ஜனவரி 26, ஒத்திகை நாட்களான ஜனவரி 20, 22, 24ஆம் தேதி ஆகிய மேற்கண்ட 4 தினங்களுக்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து போக்குவரத்துக் காவல்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

* ஜனவரி 20, 22, 24, 26 ஆகிய தினங்களில் காமராஜர் சாலையில், கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் 10 மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

* அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கிச் செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே. மடம் சாலை, வி.கே.ஐயர் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ் சந்திப்பு, லஸ் சர்ச் சாலை, கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை நீல்கிரீஸ் சந்திப்பு, மியூசிக் அகாடமி, ராயப்பேட்டை மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

* அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கிச் செல்லும் பிற வாகனங்கள், (மாநகரப் பேருந்துகள் உட்பட) சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் கச்சேரி சாலை சந்திப்பில் கச்சேரி சாலை நோக்கித் திருப்பப்படும். அவை கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை, நீல்கிரீஸ் சந்திப்பு, மியூசிக் அகாடமி, ராயப்பேட்டை மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

* டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் காந்தி சிலை நோக்கிச் செல்லும் மாநகரப் பேருந்து தடம் எண். 27-D ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் வி.எம்.தெரு சந்திப்பில் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டு, அவை வி.எம்.தெரு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் சந்திப்பு, ராமகிருஷ்ணா மடம் சாலை, மந்தைவெளி சந்திப்பு, தெற்கு கெனால் பேங்க் ரோடு, சீனிவாசாபுரம் வழியாகப் பட்டினப்பாக்கம் சென்றடையலாம்.

*அதேபோன்று மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக காந்தி சிலை நோக்கி வரும் மாநகரப் பேருந்து வழித்தடம் எண். 21-G ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மேம்பாலம் நோக்கித் திருப்பி விடப்பட்டு, அவை ராயப்பேட்டை மேம்பாலம், ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

* அதேபோன்று மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக அண்ணா சதுக்கம் நோக்கி வரும் மாநகரப் பேருந்து வழித்தடம் எண். 45-B மற்றும் 12-G ஆகியவை நீல்கிரீஸ் சந்திப்பு, மியூசிக் அகாடமி, ராயப்பேட்டை மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக அண்ணா சதுக்கம் சென்றடையலாம்.

* டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் நடேசன் சாலை சந்திப்பில் டாக்டர் நடேசன் சாலை வழியாகத் திருப்பி விடப்படும்.

* டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ் அவுஸ் சந்திப்பு நோக்கித் திருப்பி விடப்படும்.

* டாக்டர் பெசன்ட் சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ் அவுஸ் நோக்கித் திருப்பி விடப்படும்.

* பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கித் திருப்பி விடப்படும்.

* வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் (மாநகரப் பேருந்து தவிர்த்து) பெல்ஸ் ரோடு வழியாகத் திருப்பி விடப்படும். மாநகரப் பேருந்துகள் கெனால் சாலை சந்திப்பு வரை அனுமதிக்கப்படும்.

* அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக வாலாஜா சாலை விருந்தினர் மாளிகை அருகில் மாற்றப்படும்.

* பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதையில் திருப்பி விடப்பட்டு ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக வாலாஜா பாயிண்ட், அண்ணா சாலை, அண்ணா சிலை, அண்ணா சாலை, அமெரிக்கத் தூதரகம் சர்வீஸ் ரோடு, கதீட்ரல் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, காரணீஸ்வரர் பகோடா தெரு, சாந்தோம் சாலை வழியாக அடையாறு சென்றடையலாம்.

* வாலாஜா பாயிண்ட் மற்றும் அண்ணா சாலை சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் வர அனுமதியில்லை.

வாகன ஓட்டிகள் மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்துக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”.

இவ்வாறு போக்குவரத்துக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்