மனிதநேய மக்கள் கட்சியில் ஜவாஹிருல்லாவுக்கும் தமிமுன் அன்சாரிக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவுகிறது. கட்சிக் கொடி மற்றும் பெயரை பயன்படுத்த உரிமை கோரி இரு தரப்பினரும் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.
வைகோ தலைமையிலான மக்கள் நலன் காக்கும் கூட்டணியில் இடம்பெற்றிருந்த மனிதநேய மக்கள் கட்சி, பின்னர் அதிலிருந்து வெளியேறியது. அதன்பிறகு மமகவுக்குள் உட்கட்சி மோதல் ஏற்பட்டது.
கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லாவுக்கும், பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, கட்சியை பிளவுபடுத்தும் அளவுக்கு சென்றது. சென்னை தாம்பரத்தில் நடந்த மமக பொதுக்குழு கூட்டத் தில், ஜவாஹிருல்லாவை தலைவ ராகவும், அப்துல் சமதுவை பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்தனர்.
இதையடுத்து தமிமுன் அன்சாரி தனது ஆதரவாளர்களுடன் தஞ்சை யில் போட்டி பொதுக்குழு கூட்டத்தை கூட்டினார். ‘மமகவின் பெயரையும், கொடியையும் உபயோகித்து கூட்டம் நடத்துவோர் மீதும் அதில் பங்கேற் போர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஜவாஹிருல்லா அறிவித்தார். அதே நேரத்தில் தமிமுன் அன்சாரியும் தனது வழக்கறிஞர் மூலம் நாளிதழ்களில் இதேபோன்ற எச்சரிக்கையை அறிவிப்பாக வெளியிட்டார்.
இந்நிலையில், ஜவாஹிருல்லா ஏற்பாட்டில் மமக கோவை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன் தினம் நடந்தது. அப்போது, தமிமுன் அன்சாரி ஆதரவாளர்களுக்கும், ஜவாஹிருல்லா ஆதரவாளர்களுக் கும் இடையே மோதல் ஏற்பட்டது. கட்சியில் நிலவும் இந்தப் போக்கு கடைநிலை தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மமக சார்பில் தமிழகம் முழுவதும் ‘மதசார்பற்ற இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தப்படும் என்று மமக (ஜவாஹிருல்லா அணி) பொதுச் செயலாளர் அப்துல் சமது அறிக்கை வெளியிட்டார். அதே மாதிரியான லெட்டர் பேடில், மமக தலைமை நிர்வாகிகள் பட்டியல் என்ற அறிவிப்பை தமிமுன் அன்சாரியும் நேற்று முன்தினம் வெளியிட்டார். இதனால் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் அதிகரித்துள்ளது.
வழக்கு தொடர முடிவு
இது தொடர்பாக ‘தி இந்து’விடம் ஜவாஹிருல்லா கூறும்போது, ‘‘மமகவில் கூட்டம் நடத்தக்கூடிய அதிகாரம் எங்களுக்குதான் உண்டு. தமிமுன் அன்சாரியை பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டோம். ஆனால், அவர் மமக லெட்டர் பேடை பயன்படுத்துகிறார். இது தொடர்பாக தமிமுன் அன்சாரி மீது ஒரு வாரத்துக்குள் வழக்கு தொடருவோம். இதற்கான பணிகளில் இப்போது ஈடுபட்டு வருகிறோம்’’ என்றார்.
தமிமுன் அன்சாரி கூறும்போது, ‘‘நாங்கள்தான் உண்மையான மனிதநேய மக்கள் கட்சி. எங்கள் கட்சியின் கொடியையும் பெயரையும் வேறு சிலர் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் மீது விரைவிலேயே சட்டப்படி நட வடிக்கை எடுப்போம். இது தொடர்பாக அவர்களுக்கு கேவியட் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago