திருச்சியில் மழையால் சேதமடைந்த சாலைகள்; கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்: களம் இறங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்

By செய்திப்பிரிவு

திருச்சி மாநகரில் அண்மையில் பெய்த தொடர் மழையால் பல சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளன. இவற்றை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம், மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக தென்னூர் அண்ணாநகர் சாலை, சாஸ்திரி சாலை யின் பெரும்பகுதி மிகவும் மோசமாகிவிட்டதால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் தவறி விழுந்து விபத்துகளில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாகிவிட்டது.

இந்த சூழலில், வாகன ஓட்டிகளின் சிரமத்தைத் தவிர்ப் பதற்காக கோட்டை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் நாவுக்கரசர் ஏற்பாட்டின்பேரில் தென்னூர் அண்ணாநகர் சாலை, சத்திரம் பேருந்து நிலைய பகுதி சாலைகளில் மண் கொட்டப்பட்டு, அந்த சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளன.

இன்ஸ்பெக்டரின் இந்த நடவடிக்கையை காவல்துறை உயரதிகாரிகளும், சமூக ஆர் வலர்களும் பாராட்டியுள்ளனர்.

தற்காலிகமாக சீரமைக்கப் பட்டுள்ள இச்சாலையை, மாநக ராட்சி நிர்வாகம் விரைவில் தார் ஊற்றி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருச்சி மாநகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்