விருதுநகர் மாவட்டத்தில் 7 இடங்களில் முதற்கட்டமாக இன்றும், நாளையும் பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அன்புவேல் முதலில் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.
விருதுநகர் அரசு மருத்துவமனை, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை, திருச்சுழி வட்டாரம் எம்.ரெட்டியபட்டி, சிவகாசி அரசு மருத்துவமனை, எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், குன்னூர் ஆரம்ப சுகாதார நிலையம், ராஜபாளையம் அரசு மருத்துவமனை ஆகிய 7 இடங்களில் கரோனா தடுப்பூசி சுகாதாரப் பணியாளர்களுக்குப் போடப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்திற்கு மொத்தம் 9970 கரோனா தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளன. ஒவ்வொரு மையத்தில் ஒரு நாளைக்கு 100 நபர்களுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தில் 9970 பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago