கரூர் மாவட்டம்அரவக்குறிச்சி அருகேயுள்ள பூலாம்வலசு சேவற்கட்டு மழைகாரணமாக இன்றுரத்து செய்யப்பட்டது. நேற்று நடந்தசேவற்கட்டில் சேவல் காலில் கட்டப்பட்ட கத்திப்பட்டு 9 பேர் காயமடைந்தனர்.
கரூர் மாவட்டம்அரவக்குறிச்சியை அடுத்த பூலாம்வலசில் சேவற்கட்டு எனப்படும்சேவல் சண்டைமிக பிரபலம். நிகழாண்டு பூலாம்வலசுசேவற்கட்டு ஜன. 13ம் தேதி தொடங்கிஜன. 15ம்தேதி வரை 3 நாட்களுக்கு நடத்த அனுமதி வழங்கப்பட்டதை அடுத்துசேவற்கட்டு நேற்று தொடங்கியது.
மழை, சேவல்கட்டு தொடங்கும்தேதி குழப்பம்காரணமாக வழக்கத்தைவிட குறைந்தளவு சேவல்கள், சேவல் உரிமையாளகள், பார்வையாளர்கள் வந்திருந்தனர். இதனால் கார், இரு சக்கரவாகனங்கள் வருகையும்குறைவாகவே இருந்தது. வழக்கமாக 5,000க்கும் அதிகமான சேவல்களும், 10,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களும் வருகை தரும் நிலையில் நேற்றுஆயிரத்திற்கும் மேற்பட்ட சேவல்கள் மட்டுமே மோதின. 2,000த்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மட்டுமே வந்திருந்தனர்.
சேவல் காலில்கட்டப்பட்ட கத்திப்பட்டு திருப்பூர் மற்றும் தாந்தோணிமலையைசேர்ந்த 2 பேர்காயமடைந்து சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர். சிறுகாயமடைந்த 7 பேர்புறநோயாளிகளாக அரவக்குறிச்சி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மேலும் விதிகளைமீறி சேவல்கள்காலில் கத்திகட்டியதாக அரவக்குறிச்சிபோலீசார் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்துள்ளனர்.
» தை பிறந்திருக்கின்றது; நமக்கெல்லாம் வழி பிறக்கும்: தமிழக முதல்வர் பழனிசாமி
» அரவக்குறிச்சி; இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: இளைஞர், தம்பதி உயிரிழப்பு
ஏற்கெனவே மழையின்காரணமாக போட்டியைநேற்றுக்கு (கடந்த 13ம் தேதி) பதிலாக 14ம் தேதிமாற்றி வைக்கதிட்டமிடப்பட்டு நிலையில் அனுமதியளிக்கப்பட்டதேதிகளை மாற்றமுடியாததால் நேற்றே சேவற்கட்டு தொடங்கப்பட்டது. மழைகாரணமாக ஆடுகளத்தில்மழைநீர் தேங்கியதால் 2ம் நாளானநேற்று நடைபெறஇருந்த சேவற்கட்டுரத்து செய்யப்பட்டது. இதனால் சேவல்உரிமையாளர்கள், பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago