புதுச்சேரி தீயணைப்புத் துறையின் விவரங்களை மக்கள் அறிந்துகொள்ளும் விதமாகப் புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (ஜன.12) நடைபெற்றது.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இணையதளத்தைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கமலக்கண்ணன், கந்தசாமி, எம்எல்ஏ தீப்பாய்ந்தான் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
fire.py.gov.in என்ற இந்த இணையதள முகவரியில் தீயணைப்புத் துறையின் வரலாறு, தீயணைப்பு நிலையங்களின் விவரங்கள், தொடர்பு கொள்வதற்கான எண்கள், சேவை விவரங்கள், தீயணைப்பு வாரம் கொண்டாடுவதன் நோக்கம், ஊழியர்களின் விவரங்கள், வாகனங்கள் மற்றும் சாதனங்களின் விவரங்கள், மக்கள் சாசனம், வரைபடம், புகைப்படத் தொகுப்பு, துறையின் செயல்பாடுகள், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி பொதுத்தகவல் அதிகாரிகளின் விவரங்கள் மற்றும் முதல் மேல்முறையீட்டு அதிகாரியின் விவரங்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
இந்த இணையதளம் மூலம் மக்கள் தீயணைப்புத் துறையைப் பற்றி அறிந்துகொள்ளவும், வரும் காலங்களில் தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்றிதழ் பெற விண்ணப்பிப்பதற்கும் இந்த தகவல்கள் உபயோகமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
» ஓசூர் சந்தையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மலர்களின் விலை இரு மடங்கு உயர்வு
» திடீர் மின்தடை: டார்ச் வெளிச்சத்தில் பேசிய அமைச்சர் ஜி.பாஸ்கரன்
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago