புதுச்சேரியில் இன்று புதிதாக 18 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஜன.12) கூறும்போது, ''புதுச்சேரி மாநிலத்தில் 3,637 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 10 பேருக்கும், காரைக்காலில் 4 பேருக்கும், மாஹேவில் 4 பேருக்கும் என மொத்தம் 18 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை.
மேலும், புதுச்சேரி அரியாங்குப்பம் பாரதி நகரைச் சேர்ந்த 38 வயது ஆண் தொற்று பாதித்து உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 639 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.66 ஆக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 38 ஆயிரத்து 495 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 129 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 164 பேரும் என மொத்தம் 293 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
» கிராமசபைக் கூட்டத்தையே அசிங்கப்படுத்தும் திமுக: அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேச்சு
» பொங்கலை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடவே அரசு பல சலுகைகளை வழங்கியது: அமைச்சர் கே.சி.வீரமணி
இன்று 28 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 563 (97.58 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 5 லட்சத்து 21 ஆயிரத்து 149 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 4 லட்சத்து 78 ஆயிரத்து 69 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது'' என்று மோகன்குமார் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago