பிழைகளுடன் வழங்கப்பட்ட ஆதார் அட்டைகள்: பொது இ-சேவை மையங்களில் விரைவில் முகவரி திருத்தும் சேவை

By ச.கார்த்திகேயன்

தமிழகத்தில் பல ஊர்களில் வழங்கப்பட்ட ஆதார் அட்டை களில் முகவரி தவறாக இருப்பதால் அதை இருப்பிட ஆவணமாக பயன்படுத்த மக்கள் தயங்குகின்றனர். முகவரியில் உள்ள பிழைகளை திருத்துவதற் கான சேவை அரசு பொது இ-சேவை மையங்களில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பா லோருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. வேலூர் உட்பட சில மாவட்டங்களில் வழங்கப்பட்ட ஆதார் அட்டை களில், சம்பந்தப்பட்ட கிராம மக்கள் அளித்த முகவரியுடன், அருகில் உள்ள கிராமத்தின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அதை இருப்பிடச் சான்றாக பயன்படுத்தினால், மற்ற ஆவணங்

களிலும் அருகில் உள்ள கிராமத்தின் பெயர் கூடுதலாக இடம்பெறும் நிலை ஏற்பட்டது. அதனால், அவர்கள் ஆதார் அட்டையை முகவரிச் சான்றாக பயன்படுத்தாமல் இருந்து வந்தனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரக அதிகாரி ஒருவரி டம் கேட்டபோது, ‘‘அஞ்சல் துறை வழங்கிய தரவுகளின் அடிப்படையில் ஆதார் அட்டையில் முகவரியை சேர்க்கிறோம். கிராமப் பகுதிகளில் நான்கைந்து கிராமங்களுக்கு ஒரே பின்கோடு எண் இருக்கும்.

அப்படி வரும் பின்கோடு எண்ணில் குறிப்பிட்ட சில ஊர்கள் சேர்க்கப்படாமல் இருக்கும். அப்படி இருந்ததால், அருகில் உள்ள ஊரின் பெயரை ஆதார் அட்டையில் பதிவு செய்திருந்தனர். இது தொடர்பாக புகார்கள் வந்ததையடுத்து, அஞ்சல் துறையுடன் கலந்தா லோசித்து பிரச்சினை சரி செய்யப்பட்டது. ஏற்கெனவே முகவரியில் தவறுகளுடன் அட்டை பெற்றிருந்தால், அவர்கள் >https://uidai.gov.in என்ற இணைய தளத்தில் மாற்றிக்கொள்ளலாம்’’ என்றார்.

மேலும், ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது ஒரு முகவரியிலும், தற்போது வேறு முகவரியிலும் வசிப்பவர்கள் ஆதார் அட்டையை முகவரிச் சான்றாக பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது.

ஏற்கெனவே, அரசு பொது இ-சேவை மையங்களில் ரூ.10 கட்டணத்தில் இ-மெயில் முகவரி மற்றும் கைபேசி எண் ஆகியவற்றை திருத்தும் சேவை வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் முகவரி திருத்தும் சேவையும் வழங்கப்படுமா என்று அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குநர் ஜெ.குமரகுருபரனிடம் கேட்டபோது, ‘‘முகவரி திருத்தும் சேவையை பொது இ-சேவை மையங்களில் வழங்கும் வகையில், அதற்கான மென்பொருளை ஆதார் அட்டை வழங்கி வரும் யூஐடிஏஐ நிறுவனம் உருவாக்கி வருகிறது.

விரைவில் இ-சேவை மையங்களில் குறைந்த கட்டணத்தில் ஆதார் அட்டைகளில் முகவரி திருத்தும் சேவை வழங்கப்படும்’’ என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்