பறவைக் காய்ச்சல் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் கடந்த 2 தினங்களில் முட்டை விலை 50 காசுகள் சரிந்துள்ளது. விலை மேலும் சரிய வாய்ப்புள்ளது என்பதாலும், வட மாநிலங்களுக்கு முட்டை அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாலும் கோழிப்பண்ணையாளர்கள் கலக்கம்அடைந்துள்ளனர்.
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஹிமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காகங்கள், நீர்நிலைகளில் வாழும் பறவைகள் மற்றும் இடம்பெயரும் பறவைகளுக்கு பறவைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் கேரள மாநிலத்தில் உள்ள வாத்துப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, கேரள மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 32 ஆயிரம் வாத்துகளை அழித்தது. மேலும், மத்திய
அரசின் அறிவுரையின் பேரில் பறவைக்காய்ச்சல் பாதிப்புகளுக்குஉள்ளான பகுதிகள் தனி மண்டலமாக அறிவிக்கப்பட்டு, அங்கி
ருந்து மற்ற இடங்களுக்கு நோய் பரவுவதைத் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பறவைக் காய்ச்சல் காரணமாக கேரளாவில் கோழி, வாத்து மற்றும் முட்டை நுகர்வு வெகுவாக குறைந்துள்ளது. இது நாமக்கல் மண்டல கோழிப்பண்ணையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் 1,800 கோழிப்பண்
ணைகள் உள்ளன. இதன்மூலம் நாள்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் சரிபாதி முட்டைகள் கேரள மாநிலத்துக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. மீதமுள்ள முட்டைகள் உள்ளூர் மற்றும் வட மாநிலங்களுக்கும், வெளிநாடுக
ளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில் பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கு முட்டையை விற்பனைக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுஉள்ளது. இதனால், பண்ணைகளில் முட்டை தேக்கமடையும் சூழல் உருவாகியுள்ளது. விலையும் சரியத் தொடங்கியுள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாமக்கல் மண்டலக் கூட்டம் தலைவர் டாக்டர் பி.செல்வராஜ் தலைமையில் நாமக்கல்லில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், இந்தியாவின் பல பகுதிகளில் முட்டை விலை குறைந்துள்ளதால் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலையை குறைக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி 485 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை 25 காசுகள் குறைக்கப்பட்டு 460 காசுகளாக நிர்ணயம் செய்யப்
பட்டது. 510 காசுகளாக இருந்த முட்டை விலை பறவைக் காய்ச் சல் பீதி காரணமாக கடந்த 7-ம் தேதி 25 காசுகள் குறைக்கப்
பட்டது. இந்நிலையில் நேற்றும் 25 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. விலை மேலும் சரிய வாய்ப்புள்ளது என்பதால் பண்ணையாளர்
கள் கவலையடைந்துள்ளனர். இதுதொடர்பாக நாமக்கல் முட்டை உற்பத்தியாளர்கள் சங்கதலைவர் கே.மோகன் கூறும்
போது, வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் ஹெச் 1 என் 8 வகையைச் சேர்ந்தது. இது பறவைகளிடமிருந்து மனி
தர்களுக்கு பரவ வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நாமக்கல் மண்டலத்தில் முட்டைகள் வழக்கம்போல் விற்
பனைக்கு சென்று கொண்டுள்ளன. எனினும், வட மாநிலத்துக்கு முட்டை அனுப்புவதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது என்றார்.
தவறான புரிதலால் முட்டை வர்த்தகம் பாதிப்பு
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (என்இசிசி) நாமக்கல் மண்டல தலைவர் டாக்டர் பி.செல்வராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பறவைக் காய்ச்சல் பற்றிய தவறான புரிதல்களால் நாடு முழுவதும் முட்டை விலை குறைந்து வருகிறது. 2006 ஆண்டு முதல் முறையாக பறவைக் காய்ச்சல் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 25 முறை
பறவைக் காய்ச்சல் வந்துள்ளது. ஆனால்,பறவைக் காய்ச்சல் காரணமாக மனிதருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
வட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால் முட்டை, இறைச்சி கடைகளை தற்காலிகமாக மூடுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அந்த மாநிலங்களில் முட்டை மற்றும் இறைச்சி விலை குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. எனவே, அரசு பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago