அஞ்சல்துறை தேர்வில் தமிழ் புறக்கணிப்பு தொடர்வதா என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (ஜன.08) வெளியிட்ட அறிக்கை:
"அஞ்சல் துறையில் கணக்கர் பதவிகளுக்கான தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்ற அறிவிப்பு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
முன்பே போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கான தேர்வுகள் இவ்வாறு நடத்தப்பட்டு, நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டன. அப்போது, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடத்தப்படும் என்று அறிவித்தார்.
» விருதுநகர் மாவட்டத்தில் 10 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை
» பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு; குற்றவாளிகள் அனைவரையும் கூண்டில் ஏற்ற வேண்டும்: வைகோ
இப்போது அவரது வாக்குறுதியை வசதியாக அவர்களே மறந்துவிட்டு இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
செம்மொழியான பிறகும் தமிழுக்கு இந்த கதிதானா? தேர்வுக்கான அறிவிக்கை ரத்து செய்யப்பட்டு தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் தேர்வுகள் நடத்தும் வகையில் அறிவிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்".
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago