கடலூர் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனை செவிலியர்களுக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகை

By ந.முருகவேல்

கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகையை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி இன்று தொடங்கிவைத்தார்.

கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சியினை இன்று (ஜன.08) தொடங்கிவைத்து, அவர் பேசுகையில், "தமிழகத்தில் கோவிட் நோயினை தடுத்திடும் விதமாக கோவிட் தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பொருட்டு முன்னுரிமை அடிப்படையில் மருத்துவப் பணியாளர்கள், முன்னனி களப்பணியாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ள 50 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு கோவிட் தடுப்பூசி வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளாகிய மருத்துவப் பணியாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி வழங்க ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மருத்துவப் பணியாளர்களின் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் மருத்துவப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்காக 26 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்விடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள 8,546 மருத்துவப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

மருத்துவப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் ஒத்திகை கடந்த 2-ம் தேதி சென்னை, திருநெல்வேலி, நீலகிரி, கோவை மற்றும் திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் முதல்கட்டமாக நடத்தப்பட்டது. 2-ம் கட்டமாக கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கிருஷ்ணா புற்றுநோய் மருத்துவமனை, வடலூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பெண்ணாடம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 இடங்களில் தடுப்பூசி வழங்கும் ஒத்திகை நடத்தப்பட்டது" என தெரிவித்தார்.

இந்நிகழச்சியில், மருத்துவ சுகாதார பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார், மருத்துவப் பணிகள் மருத்துவர் ரமேஷ், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சாய்லீலா, மருத்துவர் பரிமேலழகன் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்