மனைவியை கூடுதல் வரதட்சணை கேட்டு தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி மதுரை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மதுரை ஊமச்சிக்குளம் அருகே கொடிக்குளத்தைச் சேர்ந்தவர் ஞானவேல் (32). இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு 2002-ல் திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு பிறகு கூடுதல் வரதட்சணை கேட்டு கோமதியை ஞானவேல் குடும்பத்தினர் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர்.
இதன் காரணமாக கோமதி 2007-ல் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு தூண்டியதாக ஞானவேலை ஊமச்சிக்குளம் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை மதுரை மகளிர் நீதிபதி எஸ்.கிருபாகரன் மதுரம் விசாரித்தார்.
» ஜன.10- கனிமொழி தலைமையில் பொள்ளாச்சியில் போராட்டம்; கடைசி நபர் கைதாகும் வரை திமுக ஓயாது: ஸ்டாலின்
அரசு சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.தங்கம் ராஜாராம் வாதிட்டார்.
விசாரணை முடிவில் ஞானவேலுக்கு கூடுதல் வரதட்சணை கேட்ட பிரிவில் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.ஆயிரம் அபராதம், தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago