பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதைக் கைவிட வலியுறுத்தி கோவில்பட்டியில் மறியலில் ஈடுபட்ட சிஐடியுவைச் சேர்ந்த 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்திய விவசாயத்தை கார்பரேட்டுகளுக்கு அடகு வைக்கும் வேளாண் திருத்தச் சட்டங்களை கைவிட வேண்டும். 52 கோடி தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக மாற்றும் 4 தொழிலாளர் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். மின் துறையை கார்பரேட்டுகளுக்கு தாரைவார்த்து மானியம் மின்சாரத்தை மறுக்கும் மின்சார மசோதா 2020-ஐ கைவிட வேண்டும். துறைமுகம், மின்சாரம், போக்குவரத்து, ரயில்வே, பிஎஸ்என்எல், எல்ஐசி மற்றும் வங்கிகளை தனியாருக்கு விற்கக் கூடாது.
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும். ஏழைகளுக்கு மாதம் 10 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக மாற்றி, சம்பளத்தை ரூ.750-ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
இத்திட்டத்தை நகர்புறத்துக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முறைசாரா தொழிலாளிகளுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் பென்ஷன் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் சிஐடியு சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
» வேளாண் சட்டங்களை எதிர்த்து விருதுநகரில் 6 இடங்களில் சாலை மறியல் போராட்டம்: 243 பேர் கைது
பேருந்து நிலையம் முன்பு நடந்த போராட்டத்துக்கு சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மணி மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் மோகன்தாஸ், முருகன், மாரியப்பன், ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 17 பெண்கள் உட்பட 31 பேரை மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன், ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago