ராமநாதபுரம் திருவாடானையில் 100 சதவீதம் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை வழங்கக்கோரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2018-19-ம் ஆண்டு கடும் வறட்சியால் நெல் விவசாயம் முழுவதும் பாதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள 400 வருவாய் கிராமங்கிளல் 283 கிராமங்களுக்கு இந்திய வேளாண் காப்பீடு நிறுவனம் 100 சதவீதம் இழப்பீடை ஒன்றரை ஆண்டுகளாக இழுத்தடித்து கடந்த ஆகஸ்டில் வழங்கியது.
ஆனால் 117 வருவாய் கிராமங்களுக்கு 25 சதவீதம் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும் என கடந்த டிசம்பரில் நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் விவசாயிகளும், மாவட்ட நிர்வாகமும் 100 சதவீத இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி வருகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் விவசாயிகள் ஏற்கனவே பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
» நெல்லையில் தொடர் மழையால் பொங்கலுக்கான மண்பாண்டங்கள் உற்பத்தி பாதிப்பு: இவ்வாண்டு 10% விலை உயர்வு
» கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா காற்றாலைகளில் முதலீடு: குமரியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
இந்நிலையில் திருவாடானை மற்றம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா விவசாயிகள் 100 சதவீதம் இழப்பீடு கேட்டு நேற்று திருவாடானை தெற்குத்தெருவில் காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டனர். அதற்கு போலீஸார் அனுமதியளிக்கவில்லை.
அதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையில் ஈடுபட்டனர்.
திருவாடானை விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா, கவாஸ்கர், தம்பிராஜ், செல்வம், விஜயேந்திரன் தலைமையில் அங்கு திரண்டிருந்த 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தீர்வு எட்டும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago