தமிழகத்தில் இன்று புதிதாக 820 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 22 ஆயிரத்து 370 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக 235 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்து 700 ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை இன்று (ஜன. 05) வெளியிட்டுள்ள விவரம்:
"தமிழகத்தில் இன்று புதிதாக 820 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 491 பேர், பெண்கள் 329 பேர்.
» ஜன.5 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்
» பறவைக் காய்ச்சல் பரவுவதால் கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு கோழி, வாத்துகள் கொண்டுவரத் தடை
தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 22 ஆயிரத்து 370 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுள் ஆண்கள் 4 லட்சத்து 97 ஆயிரத்து 58 பேர். பெண்கள் 3 லட்சத்து 25 ஆயிரத்து 278 பேர். மாற்றுப் பாலினத்தவர்கள் 34 பேர்.
இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 29 ஆயிரத்து 378 பேர். 13-60 வயதுக்குட்பட்டோர் 6 லட்சத்து 84 ஆயிரத்து 143 பேர். 60 வயதுக்கு மேற்பட்டோர் 1 லட்சத்து 8 ஆயிரத்து 849 பேர் .
இன்று புதிதாக 60 ஆயிரத்து 304 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1 கோடியே 45 லட்சத்து 2 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது.
இன்று புதிதாக 59 ஆயிரத்து 980 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால், பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 1 கோடியே 41 லட்சத்து 97 ஆயிரத்து 905 ஆக உயர்ந்துள்ளது.
இன்று தனியார் மருத்துவமனைகளில் 7 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 4 பேர் என 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 177 ஆக அதிகரித்துள்ளது.
இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர் ஒருவர். ஏற்கெனவே இணை நோய்கள் உள்ளவர்கள் 10 பேர்.
தமிழகம் முழுவதும் தற்போது வரை 7,808 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 971 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 2 ஆயிரத்து 385 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் அரசு சார்பாக 67, தனியார் சார்பாக 174 என, 241 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.
சென்னை நிலவரம்
இன்று கரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 235 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்து 700 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 256 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்து 328 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 4,030 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வரை சென்னையில் 2,342 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்".
இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
44 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago