விவசாயிகள் போராட்டத்துக்குத் தடை: சென்னை காவல்துறைக்கு முத்தரசன் கண்டனம்

By செய்திப்பிரிவு

விவசாயிகள் போராட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஜன.05) வெளியிட்ட அறிக்கை:

"மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாயிகள் விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி 41-வது நாளாக டெல்லியில் பல்லாயிரக்கணக்கில் திரண்டு போராடி வருகிறார்கள். போராட்டக் களத்தில் கடுங்குளிர், தொடர்மழை, விபத்து, பிரதமரின் கவனத்தை ஈர்க்க தற்கொலை என 60 விவசாயிகள் வரை மரணமடைந்துள்ளனர்.

பல மாநிலங்களில் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை நடத்தி விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு எதிரான வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன. நாடு முழுவதும் விவசாயிகளை ஆதரித்துப் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

தமிழ்நாடு அரசு மட்டும் மத்திய அரசின் விவசாயிகள் விரோதச் சட்டங்களை ஆதரித்து வருகின்றது. இந்ந நிலையில், தமிழ்நாட்டில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாளை (ஜன.06) முதல் காத்திருப்புப் போராட்டத்தை நடத்துவதாக விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவித்திருந்தது.

இப்போராட்டத்திற்கு சென்னை பெருநகரக் காவல்துறை தடை விதித்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

கரோனா நோய்த் தொற்றுப் பரவலை எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமைகளையும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும் பறிக்கும் ஆயுதமாக அதிமுக அரசு பயன்படுத்தி வருகிறது. படிப்படியான தளர்வுகளை அறிவித்துவிட்டு 144 தடையுத்தரவு தொடர்கிறது என்பது கேலிக்கூத்தானது. மாற்றுக் கருத்துகளை முடக்கும் வன்மம் கொண்டது.

முதல்வர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் எந்த வரைமுறைகளும் கடைப்பிடிக்காமல் மக்கள் திரட்டப்படுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.

அதிமுக அரசின் ஜனநாயக விரோதச் செயலுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு போராட்டக் களம் இறங்கும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது".

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்