தமிழகத்தைத் தொடர்ந்து புதுவை திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி? - அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்க உள்ளதாக முதல்வர் தகவல்

By செ.ஞானபிரகாஷ்

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரி திரையரங்குகளில் நூறு சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி தருவது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்க உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

கரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் புதுவையில் திரையரங்குகள் மூடப்பட்டன.

ஊரடங்கு தளர்வில் கடந்த அக்டோபர் 15-ம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க அரசு அனுமதிக்கவில்லை. ஆனால், புதுவையில் அன்றைய தினம் திரையரங்குகள் திறக்கப்பட்டன. 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், தற்போது தமிழகத்தில் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோல புதுவையிலும் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படுமா என முதல்வர் நாராயணசாமியிடம் இன்று (ஜன. 04) கேட்டதற்கு, "மத்திய அரசின் வழிகாட்டுதல், நெறிமுறைகளுக்கு உட்பட்டு முடிவெடுப்போம். தலைமை செயலாளர், ஆட்சியர், அதிகாரிகளுடன் கலந்து பேசி 100 சதவீத அனுமதி குறித்து முடிவெடுக்கப்படும்" என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்