புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளிகள் திறப்பு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது காலையில் மட்டும் பள்ளிகள் இயங்க உள்ளன. வரும் 18-ம் தேதி முதல் முழு நேரமும் செயல்படும்.

கரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் கடந்த மார்ச் முதல் பள்ளி, கல்லூரி மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாமல் இருந்தன.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 8-ம் தேதி புதுவையில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்கள் பாடங்களில் சந்தேகம் கேட்கும் வகையில் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 17-ம் தேதி இளங்கலை, முதுகலை படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இன்று (ஜன.04) முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து பள்ளிகள் செயல்படும். 1, 3, 5, 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளிலும், 2, 4, 6, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக் கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெறும்

இந்த நாட்களில் மாணவர்களுக்கு வருகைப் பதிவேடு கிடையாது. இது தவிர, 9 முதல் 12-ம் வகுப்பு வரை ஏற்கெனவே சுழற்சி முறையில் பள்ளி இயங்கி வருகிறது. விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிக்குச் சென்று சந்தேகம் கேட்டுக்கொள்ளலாம். ஆசிரியர்கள் முழு நேரமும் பள்ளியில் இருப்பார்கள்.

வருகிற 18-ம் தேதி முதல் பள்ளிகள் வழக்கம் போல் முழுமையாகச் செயல்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை புதுவை அரசின் கல்வித்துறை ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.

இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் சார்பில் கரோனா விதிமுறைககளைப் பின்பற்றி பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து, தனிமனித இடைவெளியுடன் மாணவர்களை வகுப்பறையில் அமரவைக்கும் நடவடிக்கையில் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

பள்ளி வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் பெற்றோர் தரும் விருப்ப அனுமதிக் கடிதம் பெறப்பட்டது. அதையடுத்து, வகுப்புகள் தொடங்கின.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்