கன்னியாகுமரியில் புத்தாண்டிற்குப் பின் தடை தளர்வால் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்: தொடர் விடுமுறையால் மீண்டும் களைகட்டியது

By எல்.மோகன்

கன்னியாகுமரியில் புத்தாண்டிற்கு கடற்கரைப் பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். நாளை வரை தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா மையங்கள் மீண்டும் களைகட்டியது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கடும் சூறைகாற்றால் கடல் சீற்றம் காணப்படுகிறது. இதனால் மீன்பிடி பணிகள் பாதிக்கப்பட்டதுடன், கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கன்னியாகுமரி கடற்கரையில் அதிகமான சுற்றுலா பயணிகள் கூடுவார்கள் என்பதால் கரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் வகையில் கன்னியாகுமரி, மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வருவதற்கு கடந்த 31ம் தேதியும், 1ம் தேதியும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதைப்போல் கடற்கரை பகுதிகள் சீல் வைக்கப்பட்டு போலீஸார் கண்காணித்து வந்தனர். இதனால் புத்தாண்டு தினத்தில் கன்னியாகுமரி கடற்கரை மற்றும் சுற்றுலா மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

இந்நிலையில் இந்த தடை இன்று முதல் தளர்வு செய்யப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். கடல் சீற்றமும் குறைந்ததால் தடை செய்யப்பட்டிருந்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் படகு போக்குவரத்து விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு வழக்கம் போல் இயங்கியது.

இதனால் கன்னியாகுமரியில் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகாலையில் இருந்தே காணப்பட்டது. புத்தாண்டில் இருந்து நாளை வரை தொடர் விடுமுறை என்பதால்

கன்னியாகுமரியில் பிற மாவட்டம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்திருந்தனர்.

சுற்றுலா பயணிகள் வருகையால் கன்னியாகுமரியில் உள்ள அரசு, மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் அனைத்தும் இன்று நிரம்பி வழிந்தன. மேலும் திற்பரப்பு, வட்டக்கோட்டை, பத்மநாபபுரம், மாத்தூர் தொட்டிப்பாலம் உட்பட குமரி மாவட்டத்தில் உள்ள பிற சுற்றுலா மையங்களும் களைகட்டியிருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்