மத்திய அரசின் வேளாண் திட்டத்தில் பணிபுரிந்த 274 பேர் திடீர் பணி நீக்கம்: அடுத்த திட்டங்களில் முன்னுரிமை வழங்க நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

மத்திய அரசின் வேளாண் திட்டங்களில் பணிபுரிந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட 271 பேருக்கு அடுத்ததாக நிறைவேற்றும் திட்டங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மத்திய அரசின் விவசாய நீர்ப்பாசனம் மற்றும் நீர்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டம் தமிழகத்தில் வேளாண்மை துறை மூலமாக செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் நான் உட்பட 274 பேர் பல்வேறு பணி நிலைகளில் பணிபுரிந்து வருகிறோம்.

இந்தத் திட்டத்தில் பண்ணைக் குட்டைகள் அமைத்தல், தடுப்பணைகள் கட்டுதல் பணிகள் நடைபெறுகின்றன. ஒரு திட்டம் ஒப்படைக்கப்பட்டதும் அடுத்த திட்டம் செயல்படுத்தப்படும். 2021 மார்ச் மாதம் வரை எங்கள் பணிக்கான திட்டம் உள்ளது.

இருப்பினும் எங்களை பணி நீக்கம் செய்து திட்டத்தின் தலைமை நிர்வாக அலுவலர் உத்தரவிட்டுள்ளார். நாங்கள் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். திட்டம் முடியாமல் எங்களை பணி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து பணியில் தொடர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்தத் திட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் பலர் இதே கோரிக்கையுடன் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர்கள் பலரும் 15 ஆண்டுகள் வரையில் பணியாற்றியுள்ளனர். பலர் 45 வயதை கடந்தவர்கள். இவர்களுக்கு பணி அனுபவம் அதிகம். வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளில் மனுதாரர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தேவைப்பட்டால் நேரடி வேலைவாய்ப்பில் தளர்வு வழங்கலாம்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்