தென்காசி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் முந்தைய ஆண்டு ஏற்பட்டதை விட சாலை விபத்துகள், உயிரிழப்புகள் குறைந்துள்ளன என்று எஸ்பி சுகுணாசிங் கூறியுள்ளார்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் கூறியிருப்பதாவது:
தென்காசி மாவட்ட காவல்துறையின் நடவடிக்கையால் 2020-ம் ஆண்டு கொலை வழக்கு உட்பட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள், சாலை விபத்துகள், சாலை விபத்து மரணங்கள் குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் பாலியல் குற்றவாளி ஒருவர், திருட்டு வழக்கில் 4 பேர் உட்பட 10 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஆண்டில் 31 கொலை வழக்குகள் பதிவாகியது. அனைத்து கொலை வழக்குகளிலும் 77 பேர் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கூட்டுக் கொள்ளை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, போன்றவை தொடர்பாக 220 வழக்குகள் பதிவானது. இதில், 130 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு கோடியே 61 ஆயிரத்து 890 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணம் மீட்கப்பட்டது.
போதை தடுப்பு நடவடிக்கையில் 129 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.94,430 மதிப்புள்ள 37.780 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்றவை குறித்து 789 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில், ரூ.39,87,583 மதிப்புள்ள 9,075 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யபட்டது.
சட்ட விரோதமாக ஆற்று மணல் திருட்டு மற்றும் கடத்தல் தொடர்பாக 181 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 219 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டில் 137 அபாயகரமான சாலை விபத்து வழக்குகள் உட்பட 769 சாலை விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 146 பேர் மரமணமடைந்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு 198 அபாயகரமான சாலை விபத்து வழக்குகள் உட்பட 1088 சாலை விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 221 பேர் மரமணமடைந்துள்ளனர். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டில் 61 அபாயகரமான சாலை விபத்துக்கள் உட்பட 319 சாலை விபத்துகள் குறைந்துள்ளன. சாலை விபத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 2019-ம் ஆண்டை ஓப்பிடும்போது 75 உயிரிழப்புக்கள் குறைந்துள்ளன.
புத்தாண்டில் தென்காசி மாவட்ட காவல்துறை விவேகமாகவும், துரிதமாகவும், செயல்பட்டு குற்றம் மற்றும் சாலை விபத்துகளைத் தடுப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்படும். பொதுமக்கள் அனைவருக்கும் தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்காள்கிறேன் என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago