ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.14.68 கோடியில் நெல்லை நயினார்குளம் கரையில் அழகிய நடைபாதை: நகராட்சி நிர்வாக ஆணையர் ஆய்வு

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி டவுன் நயினார்குளம் கரையை மேம்படுத்தி அழகிய நடைபாதை அமைக்கும் பணிகள் ரூ.14.68 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாக ஆணையர் க. பாஸ்கரன் ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலியில் பழைய பேருந்து நிலைய மறுகட்டமைப்பு பணிகள், புதிய பேருந்து நிலையத்தில் அபிவிருத்தி பணிகள், மாநகராட்சி அலுவலகம் எதிரே வர்த்தக மையம், பழைய பேட்டையில் லாரிகள் முனையம், பாளையங்கோட்டை பேருந்து நிலைய மறுகட்டமைப்பு பணி, நேரு சிறுவர் பூங்கா புனரமைப்பு பணிகள் என்று பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக ரூ.14.68 கோடி செலவில் நயினார்குளம் கரைப்பகுதிகளை, மேம்படுத்தி கண்கவரும் அழகிய நடைபாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட நகராட்சி நிர்வாக ஆணையர் கூறியதாவது:

சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் நயினார்குளத்தின் கரையை மேம்படுத்திட திட்டமிட்டுள்ளது, அதனடிப்படையில் முதற்கட்டமாக 1.5கி.மீ. நீளத்திற்கு நன்றாக அழுகுபடுத்துதல், பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துதல், நடைபாதை அமைத்தல், போன்ற பணிகள் ரூ.14.68 கோடி மதிப்பில் நடைபெறவுள்ளது. நயினார் குளக்கரை பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி கம்பி வேலிகளும், எதிர்புறம் தடுப்பு சுவர் அமைத்தும, நடுவில் அழகிய நடைபாதைகளும் அமைக்கபடும். மேலும் இந்த நடைபாதையின் நடுவில் குடிநீர் வசதி, உணவு அறை, கழிப்பிட வசதி, பாதுகாப்பு அறை மற்றும் குழந்தைகளுக்கான கேளிக்கை வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளது என்று தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு. மாநகராட்சி ஆணையர் ஜி. கண்ணன், ஸ்மார்ட் சிட்டி தலைமை நிர்வாக இயக்குநர் நாராயணன்நாயர், செயற்பொறியாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்