திருநெல்வேலியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் மாநகரில் 40 இடங்களில் புதிய சோதனை சாவடி அமைத்து வாகன தணிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக மாநகர காவல்துறை துணை ஆணையர் ச. சரவணன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
கரோனா தடுப்பு விதிமுறைகள் அமலில் இருப்பதால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் மூலம் கரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதால் மாநகரிலுள்ள நட்சத்திர விடுதிகள், கேளிக்கை மன்றங்கள் மற்றும் வாகனங்களில் இரவு நேரங்களில் அதிவேகமாக சென்று புத்தாண்டு கொண்டாடுவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மீறினால் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
» டிச.31 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்
» டிசம்பர் 31 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்
மாநகரில் 40 இடங்களில் புதிய சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கை செய்யப்படும்.
மேலும் மது அருந்தி வாகனம் ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு கைது நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும். புத்தாண்டை பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago