நெல்லையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடக்கம்

By அ.அருள்தாசன்

திருநெல்வேலியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி அருகே ராமையன்பட்டியிலுள்ள வேளாண்மை விற்பனை குழு கிட்டங்கியில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பயன்படுத்த வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்களை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் முதல்நிலையில் சரிார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இப்பணிகளை தொடங்கி வைத்தபின் கூறியதாவது:

சட்டப்பேரவை தேர்தலுக்காக மஹாராஷ்டிரா மாநிலம், அகமதாநகர் மாவட்டத்திலிருந்து 1020 வாக்குப்பதிவு இயந்திரம், 2280கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 2430 விவிபாட் மற்றும் ஜால்னா மாவட்டத்திலிருந்து 210 கட்டுப்பாடு இயந்திரம்,280 விவிபாட் இயந்திரங்கள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் நடைபெறுகிறது.

பெல் நிறுவன 6 பொறியாளர்கள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபார்க்கும் நடைபெறுகிறது. ஜனவரி மாதம் 2-ம் வாரத்துக்குள் முதல்கட்ட சரிபார்க்கும் பணிகள் முடிக்கப்படும். இங்கு 24 மணிநேரம் கண்காணிப்பு கேமிரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. அத்துடன் போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிவித்தார்.

திருநெல்வேலி சார் ஆட்சியர் வி.சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் எம்.கணேஷ்குமார், ந.சாந்தி, தேர்தல் வட்டாட்சியர் ஆர்.கந்தப்பன், திருநெல்வேலி வட்டாட்சியர் ஆர்.பகவதி பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்