தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல், மயிலாடும்பாறை, கொற்கை, கங்கைகொண்ட சோழபுரத்தில் 2021 செப்டம்பர் வரை அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், கீழடி, கொடுமணலில் அடுத்தக்கட்ட அகழாய்வு மேற்கொள்ளவும், தாமிரபரணி ஆறுப்படுகை, சிவகளை, கொந்தகையில் அகழாய்வு மேற்கொள்ள தமிழக தொல்லியல்துறைக்கு அனுமதி வழங்க மத்திய தொல்லியல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கேட்டு தூத்துக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.காமராஜ் என்ற முத்தாலங்குறிச்சி காமராஜ் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார்.
மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் எல்.விக்டோரியா கவுரி தாக்கல் செய்த பதில் மனுவில், கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல், மயிலாடும்பாறை, கொற்கை மற்றும் கங்கைகொண்ட சோழபுரத்தில் 2020- 2021 ஆண்டில் 2021 செப்டம்பர் மாதம் வரை அகழாய்வு மேற்கொள்ள மத்திய தொல்லியல்துறை அனுமதி வழங்கியுள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.
இதை பதிவு செய்து கொண்டு மனுவை முடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago