குமுளி மலைப்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இப்பாதையில் செல்ல வரும் 5-ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் முதல் குமுளி வரை சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக திண்டுக்கல் - தேவதானப்பட்டி வரை பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது தேனி மாவட்டத்தில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் குமுளி மலைச்சாலை அகலப்படுத்தும் பணி துவங்கியது. இதனால் டிச.24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை தற்காலிகமாக இப்பாதை மூடப்பட்டது.
தற்போது பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து கொண்டுள்ளதால் வரும் 5-ம் தேதி வரை இப்பாதையில் செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே சரக்கு உள்ளிட்ட அனைத்து வகை வாகனங்களும் கம்பம்மெட்டு சோதனைச் சாவடி வழியே மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என்று ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago