தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டில் கொலை, விபத்து உயிரிழப்புகள் குறைவு: 128 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையின் 2020-ம் ஆண்டின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

குண்டர் சட்டம்:
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு பாலியல் குற்றவாளிகள் 19 பேர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தவர்கள் 10 பேர், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் 2 பேர் உள்ளிட்ட 128 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 6 மாதத்தில் மட்டும் 86 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 77 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கூடுதலாக 51 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கொலை வழக்குகள் :
இந்த ஆண்டு மொத்தம் 58 கொலை வழக்குகள் பதிவாகி, அனைத்து வழக்குளிலும் மொத்தம் 180 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் 72 கொலை வழக்குகள் பதிவாகியிருந்தன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 14 வழக்குகள் குறைவாக பதிவாகியுள்ளன.

இந்த ஆண்டில் கூட்டுக்கொள்ளை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்றவை தொடர்பாக பதிவான 443 வழக்குளில் 225 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, எதிரிகளை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1,64,89,960 மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போதைப்பொருள் :
இந்த ஆண்டில் போதை தடுப்பு குற்றத்தில் 168 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.61,35,110 மதிப்புள்ள 25 கிலோ சரஸ் என்னும் போதைப்பொருள் மற்றும் 134 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.3,99,750 மதிப்புள்ள 75 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 95 வழக்குகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்றவை தொடர்பாக 841 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.58,54,396 மதிப்புள்ள 9,587 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 514 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.15,87,984 மதிப்புள்ள 2,358 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிம்போது, இந்த ஆண்டு 327 வழக்குகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மணல் திருட்டு :
இந்த ஆண்டு சட்ட விரோதமாக ஆற்றுமணல் திருட்டு மற்றும் கடத்தல் சம்மந்தமாக 126 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 159 எதிரிகள் கைது செய்யப்பட்டு 187 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 119 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 223 எதிரிகள் கைது செய்யப்பட்டு 144 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 7 வழக்குகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டு, இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டுள்ளனர்.

சாலை விபத்துக்கள் :
இந்த ஆண்டு 233 அபாயகரமான சாலை விபத்து வழக்குகள் உட்பட 1004 சாலை விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 252 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 272 அபாயகரமான சாலை விபத்து வழக்குகள் உட்பட 1217 வழக்குகள் பதிவாகியுள்ளன, இவற்றில் 303 பேர் மரணமடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 39 அபாயகரமான சாலை விபத்துக்கள் உட்பட 213 சாலை விபத்துக்கள் குறைக்கப்பட்டுள்ன. சாலை விபத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 51 இறப்புகள் குறைக்கப்பட்டுள்ளன என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்