2020-ம் ஆண்டு இயல்பை விட கூடுதல் மழைப்பொழிவு; வடகிழக்குப் பருவமழை ஜன.10 வரை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை ஜன.10 வரை நீடிக்க வாய்ப்புள்ளது, தமிழகத்தில் கடந்த ஆண்டு இயல்பை விட வடகிழக்கு, தென்மேற்குப் பருவமழை அதிகம் பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று அளித்த பேட்டி:

“வடகிழக்குப் பருவமழை இன்னும் முடியவில்லை. ஜன.10 வரை மழை இருக்க வாய்ப்பு. 2020 இந்த ஆண்டு மொத்த சராசரி மழை அளவு 94.6 செ.மீ. மழை அளவில் 98.4 செ.மீ. மழை கிடைத்துள்ளது. இது சராசரி மழை அளவைவிட 4 சதவீதம் அதிகம். இதே காலகட்டத்தில் தென்மேற்குப் பருவமழை அளவில் கிடைக்க வேண்டிய சராசரி அளவான 34.2 செ.மீ.ல் நமக்குக் கிடைத்தது 42.2 செ.மீ மழை கிடைத்துள்ளது. இது இயல்பை விட 24 சதவீதம் அதிகம்.

வடகிழக்குப் பருவமழை காலகட்டமான அக்டோபரிலிருந்து டிசம்பர் வரை சராசரியாக கிடைக்க வேண்டிய மழை அளவான 44.9 செ.மீ. நமக்குக் கிடைத்த மழை அளவு 47.7 செ.மீ. இது சராசரியைவிட 6 சதவீதம் அதிகம்.

தென் இந்தியாவில், ஆந்திராவில் இந்தக் காலக்கட்டத்தில் வடகிழக்கு, தென்மேற்குப் பருவமழை காலகட்டத்தில் அதிக மழை பெய்துள்ளது. கேரளாவில் இரண்டு மழை அளவும் இயல்பாக இருந்தது. ஆனால் வடகிழக்குப் பருவமழை 26% குறைவாகப் பெய்துள்ளது. கர்நாடகாவில் இந்தக் காலகட்டத்தில் சராசரி மழை அளவு பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் மாவட்டங்களில் பார்த்தால் தென்மேற்குப் பருவமழை சரியாக இருந்துள்ளது. வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கமான சராசரி மழை அளவைவிட 39% குறைவு. ஈரொடு, திருச்சி மாவட்டங்களில் இயல்பைவிட 30% குறைவு. நாமக்கல், நீலகிரி மாவட்டங்களில் இயல்பைவிட 25% குறைவு.

விழுப்புரம், திருப்பத்தூர் மாவட்டங்களில் 45% கூடுதல் மழை பெய்துள்ளது. புதுவை 40%, கடலூர் 34%, சென்னை 30% அதிக மழை கிடைத்துள்ளது.

சென்னையைத் தனியாகப் பார்த்தால் இந்த ஆண்டு சராசரியாகப் பெய்யவேண்டிய சராசரி மழை அளவு 133.3 செ.மீ. இதில் 157.2 செ.மீ. மழை கிடைத்துள்ளது.

ஜூன் முதல் செப் வரையிலான தென்மேற்குப் பருவமழை காலகட்டத்தில் கிடைக்கவேண்டிய சராசரி மழை அளவு 43.9 செ.மீ. நமக்குக் கிடைத்த மழை அளவு 44.3 செ.மீ ஆகும்”.

இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்