மதுரை இளைஞர் மலேசியாவில் கொலை?- மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உத்தரவு

By கி.மகாராஜன்

மலேசியாவுக்கு வேலைக்குச் சென்ற மதுரை இளைஞர் கொலையானதாகக் கூறப்படும் நிலையில், மகனைக் கண்டுபிடிக்கக் கோரி தந்தை தாக்கல் செய்த மனு மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை, காமராஜபுரத்தைச் சேர்ந்த சப்பாணி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

என் மகன் பூமிநாதன் (34). திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. கடந்தாண்டு மலேசியா சென்றார். அங்கு ஒரு ஏஜெண்ட் அவரது பாஸ்போர்ட்டைப் பெற்றுள்ளார்.

அதன்பிறகு திரும்ப ஒப்படைக்கவில்லை. ஒரு தோட்டத்தில் பணியாற்றியுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் எங்களைத் தொடர்பு கொண்டு பேசினார். அதன்பிறகு தொடர்பு கொள்ளவில்லை.

மலேசியாவிலுள்ள சில சமூக விரோத கும்பல்கள் என் மகன் உள்ளிட்ட சிலரை கொத்தடிமையாக அடைத்த வைத்து சித்ரவதை செய்துள்ளனர். அவர் நிலை என்ன என்பது தெரியவில்லை.

இது தொடர்பாக மத்திய, மாநில அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தோம். எந்த மேல் நடவடிக்கையும் இல்லை. எனவே, என் மகனைக் கண்டறிந்து ஆஜர்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் பி.வேல்முருகன், ஜி.இளங்கோவன் ஆகியோர் இன்று அவசர மனுவாக விசாரித்தனர்.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ராஜாகார்த்திகேயன் ஆஜராகி, மனுதாரர் மகன் மர்மமான முறையில் இறந்ததாக சொல்கிறார்கள். அவரது நிலை குறித்து உறுதியான தகவல் என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கையை பரிசீலித்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் விவரத்தை ஜனவரி 20 தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்