உங்கள் முடிவு ஒவ்வொரு தமிழரின் இதயத்தையும் நொறுக்கியுள்ளது என்று ரஜினியின் அரசியல் முடிவு தொடர்பாக குஷ்பு தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 31-ம் தேதி தனது கட்சியின் தொடக்க நாளை அறிவிப்பதாக இருந்தார் ரஜினி. ஆனால், 'அண்ணாத்த' படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருந்த அவருக்கு திடீரென்று ரத்த அழுத்த மாற்றம் ஏற்பட்டது. இதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு சென்னை திரும்பினார் ரஜினி. அப்போது மருத்துவர்கள் பல்வேறு விஷயங்களை அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசியல் வருகை இல்லை என்பதை அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துவிட்டார் ரஜினி. இதற்காக விடுத்துள்ள நீண்ட அறிக்கையில் தனது சூழ்நிலையை விளக்கிவிட்டு, ரசிகர்களிடமும், தமிழக மக்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.
ரஜினியின் இந்த முடிவுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தற்போது ரஜினியின் முடிவு குறித்து ரஜினியின் நெருங்கிய தோழியும், பாஜக கட்சியைச் சேர்ந்தவருமான குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
» நீங்கள் எங்களுக்கு முக்கியம் தலைவா: கார்த்திக் சுப்புராஜ் உருக்கம்
» மாற்றத்தை விரும்பினால் கமலுக்கு ஆதரவு அளியுங்கள்: ரஜினிக்கு விஜய் மில்டன் வேண்டுகோள்
"அன்பார்ந்த ரஜினிகாந்த், உங்கள் முடிவு ஒவ்வொரு தமிழரின் இதயத்தையும் நொறுக்கியுள்ளது. ஆனால், உங்கள் ஆரோக்கியத்தை, நலனை விட எதுவும் பெரிதல்ல என்பது எனக்குப் புரிகிறது.
உங்கள் நல விரும்பியாக, தோழியாக உங்கள் முடிவுக்கு நான் ஆதரவு கொடுக்கிறேன். நீங்கள் எனக்கு மிகவும் விசேஷமான, முக்கியமான நபர். ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள், மகிழ்ச்சியுடன் இருங்கள்".
இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago