கன்னியாகுமரி மாவட்டத்தில் பழுதான அரசு பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின் றனர். விபத்துகள், நடுவழியில் பஸ் நிற்கும் சம்பங்கள் தினந்தோறும் நடைபெறுகின்றன.
பஸ்களை பழுதுநீக்க நடவ டிக்கை எடுக்காமல் போக்குவரத் துக்கழக நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நேற்று பெருஞ்சாணியில் இருந்து தக்கலை நோக்கிச் சென்ற அரசு பஸ் மருந்துகோட்டையை தாண்டி பத்மநாபபுரம் வந்தபோது பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த வீட்டுக்குள் புகுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால், அதிர்ஷடவசமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இதேபோல், குளச்சல் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட அரசு பஸ் அங்குள்ள அண்ணா சிலை சந்திப்பில் திரும்பியபோது பழுதாகி நின்றது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.
மாவட்டம் முழுவதும் பழுதான அரசு பஸ்கள் இயக்கப்படுவதால், மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
ஓராண்டாக தொடரும் அவலம்
மலைப்பகுதிகள் அதிகம் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஓராண்டாக தரமில்லாத அரசு பஸ்கள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. அரசு பஸ்கள் அடிக்கடி விபத்துகளை சந்திப்பதால், அதில் பயணம் செய்ய மக்கள் பயப்படுகின்றனர்.
கடந்த இரு மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் பயணத்தின்போது பழுதாகி நடுவழியில் நின்றதாக போக்கு வரத்துத்துறை வட்டார புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதன்பின்பும் அவற்றை சரிசெய்து இயக்க நடவ டிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டு கின்றனர். குறிப்பாக குலசேகரம், அருமனை, ஆறுகாணி, பத்து காணி, பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றாறு உள்ளிட்ட பகுதி களில் வசிக்கும் மக்கள், பஸ் பழுதாகி பாதியிலேயே நிற்ப தால் பல மைல் தூரம் நடந்து செல்ல வேண்டிய அவல நிலைக்கு ஆளாகின்றனர். காலை வேளைகளில் வேலைக் குச் செல்லும்போதும், மாலை வேளைகளில் வீடு திரும் பும்போதும், நடுவழியில் இறக்கி விடப்படுவதால், கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகின் றனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.
ஓட்டுநரை பலிகடா ஆக்குவதா?
போக்கு வரத்து கழக ஊழியர் ஒருவர் கூறும்போது, “போக்குவரத்து கழக பணிமனைகளில் பஸ்களை பழுதுபார்ப்பதற்கு போதிய உதிரி பாகங்கள் இருப்பில் இல்லை. தரமில்லாத பஸ்களை இயக்குவதால் ஏற்படும் விபத்துகளுக்கு ஓட்டுநரையும், நடத்துநரையும் குற்றம்சாட்டுவது எந்தவிதத்தில் நியாயமாகும்?
தற்போது 25 புதிய பஸ்கள் குமரி மாவட்டத்தில் இயக்கப்படவுள்ளது. அதேநேரம் நூற்றுக்கணக்கான பழுதான பஸ்களை சரிசெய்ய இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பஸ்களை தரம் உயர்த்த ரூ. 2 கோடி ஒதுக்கியிருப்பதாகக் கூறுகிறார்கள். சீரமைப்புப் பணிகள் தொடங்கினால்தான், அதுகுறித்து கூற முடியும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago