திருவள்ளுவரை மதச் சித்தாந்தத்துக்குள் அடைப்பது சரியல்ல: டிடிவி தினகரன் விமர்சனம்

By செய்திப்பிரிவு

உலகப் பொதுமறையான திருக்குறளைத் தந்த வள்ளுவப் பெருந்தகையை எந்தவொரு மதத்திற்குள்ளும், சித்தாந்தத்திற்குள்ளும் வண்ணம் பூசி அடைக்க முயல்வது சரியானதல்ல. தமிழக அரசின் கல்வித்துறை உடனடியாக இந்தத் தவறைச் சரிசெய்ய வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இதுகுறித்து விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“உலகப் பொதுமறையான திருக்குறளைத் தந்த வள்ளுவப் பெருந்தகையை எந்தவொரு மதத்திற்குள்ளும், சித்தாந்தத்திற்குள்ளும் வண்ணம் பூசி அடைக்க முயல்வது சரியானதல்ல. அதிலும் தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியே இப்படியொரு தவறு செய்வது கண்டிக்கத்தக்கது.

வள்ளுவர் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பொதுவானவர். அவரது சிந்தனைகள், மதங்களைக் கடந்து மனிதர்கள் அனைவரும் பின்பற்றத்தக்கவை.

திருக்குறளை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, அதிலும் குறுகிய எண்ணத்தோடு செயல்படக் கூடாது. எனவே, தமிழக அரசின் கல்வித்துறை உடனடியாக இந்தத் தவறைச் சரிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்