தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான அதிமுகவின் பிரச்சாரம் சென்னை ராயப்பேட்டையில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தொடங்கி வைக்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லதுமே மாதம் தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை அனைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. ஆளுங்கட்சியான அதிமுகவைப் பொறுத்தவரை, கடந்த வாரம்சேலத்தில் முதல்வர் பழனிசாமிதனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
இருப்பினும், கட்சி சார்பில் பிரச்சாரம், சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தொடங்கி வைக்கப்படுகிறது.
ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அவைத்தலைவர் இ.மதுசூதனன், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், பல்வேறு பிரிவுகளின் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.
இதற்காக ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று ஆய்வு செய்தார்.
டிச.29-ல் முதல்வர் பிரச்சாரம்
இப்பிரச்சார பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து, வரும் 29-ம் தேதிநாமக்கல்லில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்தி வேலூர் தொகுதிகளுக்கு உட்பட்டபகுதிகளில் பல்வேறு தொழில் பிரிவினர், விவசாயிகள் அமைப்புகளைச் சந்திக்கும் முதல்வர், கட்சியினருடனும் ஆலோசனை நடத்துகிறார்.
அதன்பின், 30-ம் தேதி காலைநாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் பிரச்சாரம் செய்கிறார். தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி செல்லும் அவர், துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, திருச்சிராப்பள்ளி, ரங்கம், திருவெறும்பூர், மணப்பாறை தொகுதிகளில் பல்வேறு தரப்பினரை சந்திக்கிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
50 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago