அரசு செயல்படுத்தும் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்: மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் செய்தி, மக்கள் தொடர்புத் துறை அலுவலர்கள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை தலைமைச் செயலகத் தில் செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. செய்தி, மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராசாராம், கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) தங்க புகழேந்தி, கூடுதல் இயக்குநர் (செய்தி) எஸ்.பி.எழிலழகன், இணை இயக்குநர் (பொருட்காட்சி) கு.தானப்பா மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: ஏழை, எளிய மக்களின் நலன் கருதி தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை எல்லா மாவட்டங்களி லும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனைவரும் முனைந்து பணியாற்ற வேண்டும். மாவட்டங்களில் உள்ள நினைவு மண்டபங்கள் முறையாக பராமரிக்கப்படுவதை சம்பந்தப்பட்ட மக்கள் தொடர்பு அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.

மாவட்டங்களில் நடக்கும் பொருட்காட்சியை அதிக மக்கள் பார்வையிடும் வகையில் சம்பந்தப்பட்ட மாவட்ட செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நவீன தொழில் நுட்பங்களுக்கு ஏற்றவாறு உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்